விவசாயிகளுக்காக இந்த சட்டம் இருந்தால்..ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்..? ராகுல்காந்தி..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் போராட்டம் குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட்டுள்ளனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி,

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம்.

இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்..? ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேளாண் சட்டத்தால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பு இல்லை, ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.

author avatar
murugan