,

இது தான் உண்மையில் அமிர்த கால் என்றால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு எங்கே… ராகுல் காந்தி விமர்சனம்.!

By

Rahul gandhi JobYouths

வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 

இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால், நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுகின்றனர் என ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணிப்பதாக கூறிய ராகுல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் இது உண்மையில் அமிர்த கால் என்றால் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டது என்று ராகுல் காந்தி மேலும் கூறினார். 2014ல் 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள், 2022ல் 14.6 லட்சமாக குறைந்துள்ளதாக காந்தி சுட்டிக்காட்டினார். இந்த அரசின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.

சில முதலாளித்துவ நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி மேலும் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்துவதற்கு, பொதுத்துறை நிறுவனங்கள் அரசிடமிருந்து ஆதரவை பெற வேண்டும் அப்போது தான் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.