பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

தமிழக முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதல்வர் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.