தேர்வு முடிவுகளில் குறைகள் இருப்பின் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்! – அரசுத் தேர்வுகள் இயக்ககம்

தேர்வு முடிவுகளில் குறைகள் இருப்பின் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி வாயிலாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.