“நீட் தொடர்ந்தால்..நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம்” -நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எச்சரிக்கை..!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு,ஆளுநருக்கு அனுப்பட்டது.

இந்நிலையில்,நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கையை தமிழக அரசு நேற்று இணையதளத்தில் https://drive.google.com/file/d/18WvEoNP5pYXE0xLoPQ9logPaA34Hg69h/view வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற,நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும்.

மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்புதரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

இதனால்,நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள்,அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

2007-ல் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல,நீட் தேர்வை ரத்து செய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும்.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது.மேலும், நீட் கோச்சிங் என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால்,நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல.ஏனெனில், முதல் முறை நீர் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

2 hours ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

4 hours ago

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…

5 hours ago

அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…

5 hours ago

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

7 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

7 hours ago