பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும்…! கனிமொழி

By

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும்.சிறிய நடுத்தர தொழில்கள் நசுக்கப்படும், நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். எனவே மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அவர்களுக்குக் காவடி தூக்கும் அதிமுக ஆட்சியையும் தூக்கி எறியப்பட வேண்டும் அப்போதுதான் தந்தை பெரியாரின், தலைவர் கலைஞரின் கனவு நிறைவேறும்  என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.