மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சபட்டால் அந்த தடுப்பூசி முதலில் நானே போட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கண்டறியப்பட்ட  கோவீஷீல்டு கோவாக்சின் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மக்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்ட எந்த நம்பருக்கும் இதுவரை சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சபட்டால் அந்த தடுப்பூசி முதலில் நானே போட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி குறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட உடனே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது. தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்களுக்குப் பின் தான், இரண்டாவது டோஸ் போடப்படும். இந்த டோஸ் கொடுத்து 14 நாட்களுக்கு பின்பு தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.