நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் அது ஜனநாயக படுகொலை – அனந்தராமன்..!

நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் அது ஜனநாயக படுகொலை என  புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் நாராயணசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக நியமன எம்.எல்.ஏ-க்கள் அனைவரும்  சட்டபேரவைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் சட்டபேரவை கூடுவதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசியபோது, புதுவை மாநில மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர்.

எதிர்க்கட்சியில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என்று எங்களது  வேண்டுகோள் சபாநாயகர் இதை நிறைவேற்ற வேண்டும். நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் அது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.

author avatar
murugan