நான் இப்படி இருந்திருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும்!

  • எனது வாழ்க்கையை இப்போதுதான் வாழத் தொடங்கி இருக்கிறேன்.
  • நான் வெற்றி பெறாமல் போயிருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும்.

நடிகை கங்கானா ராணவத் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவரை தற்போது,  ‘பங்கா’ திரைப்படத்தில் பள்ளி வயது சிறுவனுக்கு தாயாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது திருமணம் குறித்தும், தனது குடும்பம் குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை இப்போதுதான் வாழத் தொடங்கி இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வாழ விரும்புபவர் கிடைத்தால் ஓகேதான். ஆனால், இந்தக் காலகட்டத்தில் சுமைகளை நான் விரும்பவில்லை. எனவே, என்னை விரும்பி வருகிறவர், குடும்பத்தை பொறுப்பெடுத்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் தனது குடும்பம் குறித்து கூறுகையில், 15 வயதில் என் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றேன். இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இந்த இணைவு, என் வெற்றிகளால்தான் சாத்தியமானது. நான் வெற்றி பெறாமல் போயிருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும் என்று கூறியுள்ளார்.