கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம்! ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டம்!

கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்

By leena | Published: Jul 10, 2020 01:30 PM

கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆரின் கடிதம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவ் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், 'இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் தயாரித்த கொரோனா தடுப்பு  மருந்தை விரைவாக பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.' என்று தெரிவித்துள்ளார். மேலும், 'எல்லா பரிசோதனைகளையும் முடித்து, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை பாரத் பயோடெக் நிறுவனம் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.' என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc