3 மாதங்களில் 10 லட்சம் பயனாளர்களை அடைந்த ICICI வாட்ஸாப் வங்கி சேவை!

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவை ஒரு மில்லியன் 10 லட்சம் பயனாளர்களை

By Rebekal | Published: Jul 07, 2020 05:20 PM

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவை ஒரு மில்லியன் 10 லட்சம் பயனாளர்களை அதற்குள் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்தும் செய்ய பழகி விட்டனர். இந்நிலையில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் இருந்து ஏராளமான வங்கி தேவைகள் மேற்கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் அப்பில் தனது சேவையை அறிமுகப்படுத்தியது.

குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து ஊக்கமளிக்க கூடிய பதிலை பெற்றுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மூன்று மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை ஐசிஐசிஐ வங்கி பெற்றுள்ளதாம். இனிவரும் அடுத்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்குவது தங்களது நோக்கமாக உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc