நடப்பு உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்டன்களான  விராட் , ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் ஐசிசியிடம் எல் இ டி பெய்ல்ஸ்ஸை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.இவர்களது கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஐசிசி எல்இடி பெய்ல்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பெய்ல்ஸ் கடந்த 2015- ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போட்டியின் போது பந்து ஸ்டம்பில் அடித்தும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 09-ம் தேதி நடந்த இந்தியா , ஆஸ்திரேலிய எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது பும்ரா வீசிய பந்து ஸ்டம்பில் அடித்தது.

ஆனால் அப்போது பெய்ல்ஸ் கீழே விழுவததால் டேவிட் வார்னர் ஆட்டமிழக்கவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து ஸ்டெம்பில் அடித்தும்  பெய்ல்ஸ் கீழே விழுவததால் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நீக்க கோரி ஐசிசியிடம் விராத் கோலி, ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது உலகக் கோப்பை போட்டிகளில் 10 போட்டிகள் மேலாக  முடித்த நிலையில் எல்இடி பெய்ல்ஸ்ஸை மாற்றினால் போட்டி யின் நம்பகத்தன்மை கேள்வி குறியாக மாறிவிடும் என கூறி ஐசிசி நிராகரித்தது.