ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் கோலி மற்றும் ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி அயர்லாந்தின் ஹாரி டெக்டர் முன்னிலை.
ஐசிசி (ICC) ஒருநாள் தரவரிசை பட்டியலில் ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் மற்றும் விராட் கோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி அயர்லாந்தின் ஹாரி டெக்டர் முன்னிலைக்கு வந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போதைய ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு இடங்கள் கீழே சரிந்துள்ளனர். முன்னதாக, ஏழாவது இடத்தில் இருந்த விராட் கோலி (719 Rating) தற்போது எட்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா (707 Raiting) 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஆனால், அயர்லாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி டெக்டர் (722 Rating) அதிகபட்ச புள்ளிகளை பெற்று ஒன்பது இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். அயர்லாந்தின் சமீபத்திய ஒருநாள் தொடரின் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது டெக்டர் 206 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Harry Tector has achieved the highest rating by an Ireland batter in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings for Batting 🌟
Details ➡️ https://t.co/9xdbhCIxdK pic.twitter.com/uifF9a0aau
— ICC (@ICC) May 17, 2023