ஐசிசியின் “ஹால் ஆப் ஃபேம்” விருது.. தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் தேர்வு!

ஐசிசியின் “ஹால் ஆப் ஃபேம்” விருதிற்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு கவுரவம் செய்யப்படும். இது பட்டமாக இல்லாவிட்டாலும்கூட ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இணைவது மிகப்பெரிய மரியாதையாகச் சர்வதேச வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் ஹால் ஆப் ஃபேம், ஒரு உயர்ந்த பட்டமாகும். இது 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு பல்வேறு பங்களிப்புகள், சாதனைகள் புரிந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கவுரவம் சேர்க்கப்படும்.

இது தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், சர்வதேச அளவில் 55 வீரர்கள் இணைக்கப்பட்டனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான பிஷன் சிங் பேடி, கபில் தேவ், கவாஸ்கர் ஆகிய வீரர்கள் தேர்வானார்கள்.

இந்தநிலையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரரான ஜாக் காலிக்கு ஐ.சி.சி.யின் ஹால் ஆப் ஃபேம் விருதுக்கு தேர்வானார். அதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அவருடன் ஆஸ்திரேலியா அணியின் வீராங்கனை லிசா ஸாலேகர் மற்றும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ்க்கு இந்த விருது வழங்கப்பட்டது.