#AUSvIND: ஆஸ்திரேலிய அணிக்கு 40% அபராதம் விதித்தது ஐசிசி!

குறைந்த ஓவர் ரேட் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதித்து, ஆஸ்திரேலியா அணிக்கு 4 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. அதன்படி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓவர் ரேட் காரணமாக போட்டி ஊதியத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணிக்கு 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெஸ்ட் சாம்பியன் புள்ளி பட்டியலில் இருந்து ஆஸ்திரேலியா அணிக்கு 4 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.