மத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

நீண்ட சட்ட போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவை இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இதனை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில், தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும்‌, அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்