காக்கா முட்டை படத்தின் மூலம் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பல பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது, சமீபத்திய படமான ‘ஃபர்ஹானா’ திரைப்பட ப்ரோமோஷன் பணியின் போது, தெலுங்கு சினிமா பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவுடன் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் நடித்தாலும், தெலுங்கை விட தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், “எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

[Image source : file image ]
நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன், ஆனால் அது எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் நடித்திருபேன் என்று பகிர்ந்து கொண்டார்.

எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், நான் உடனே ஓகே சொல்லிருப்பேபின். ராஷ்மிகா ஸ்ரீவல்லியாக நன்றாக நடித்தார், ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துவேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன்” என்று ஃபர்ஹானா பட ப்ரோமோஷன் பணியின் போது பகிர்ந்து கொண்டார்.