சூப்பர் ஸ்டாருடன் வேலை செய்ததால் தான் அழகாய் தெரிந்தேன் பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!!

சூப்பர் ஸ்டாருடன் வேலை செய்ததால் தான் அழகாய் தெரிந்தேன் பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!!

பிரபல நடிகை சிம்ரன் இவர் மிக சிறந்த டான்ஸர். இவர் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு சிம்ரன் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது ரஜினியின் ‘ பேட்ட ‘ படத்தில் நடித்துள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சிம்ரன் கூறியதாவது , நான் ரஜினி ரசிகை. மேலும் அவரை போன்று நடக்க, கண்ணாடி அணிய பல முறை முயற்சி செய்துள்ளேன்.

‘ பேட்ட’  படத்தில் நான் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த படத்தில் டயட், யோகா ஆகியவற்றை மேற்கொண்டு தான் ஃபிட்டாக இருக்கிறேன். பேட்ட பெரிய படம் இதனை  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்தை விட எனக்கு மனசு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் சிம்ரன் அவர்கள் கூறுகையில்’ பேட்ட ‘படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. மேலும் ரஜினி சாரை பார்த்ததும் வசனத்தை மறந்து விடுவேன் என்ற பதட்டத்தில் இருந்தேன். உடனே அவர் டென்ஷன் ஆக வேண்டாம்  நாம் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறோம்  பதட்டப்படாதீங்க என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். மேலும்’ பேட்ட ‘படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்ததால் தான் நான் அழகாய் இருக்கிறேன் என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *