அமைதியான போராட்டங்களுக்கு துணை நிற்பேன் – எச்சரிப்புக்கு பிறகும் கனட பிரதமர் கருத்து!

அமைதியான போராட்டங்களுக்கு துணை நிற்பேன் – எச்சரிப்புக்கு பிறகும் கனட பிரதமர் கருத்து!

விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஏற்கனவே கூறிய கருத்துக்கு இந்தியா எச்சரிப்பு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டங்களுக்கு தன் எப்பொழுதுமே துணை நிற்பேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், வெளிநாட்டிலிருந்து ஆதரித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். இவர் ஏற்கனவே இது குறித்து கூறுகையில், விவசாயிகளின் போராட்டம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், விவசாயிகளின் உரிமைகளை போராடி நிலைநாட்டுவதற்கு கனடா எப்பொழுதுமே துணை நிற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துக்கு இந்தியாவில் மத்திய அரசு சார்பில் வெளியுறவு துறை மூலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது உள்நாட்டு விவகாரங்களில் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடுவது இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இதுதொடர்பாக அறிக்கை தருமாறும் கனட தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த எச்சரிக்கைக்கு பின்பு மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், “தான் அமைதியான போராட்டங்களின் உரிமைக்காக எப்பொழுதுமே எழுந்து நிற்பேன்” என கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube