“டெல்லியில் பள்ளிகளை திறக்க மாட்டேன்” – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து முழுமையாக நம்பும் வரை டெல்லி அரசு பள்ளிகளைத் திறக்காது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி செயலகத்தில் தனது சுதந்திர தின விழாவில் அவரது உரையை தொடங்கிய கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் கொரோனா நிலைமை இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி அரசுக்கு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்றார் .

இந்நிலையில் ரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், “நான் மக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து பள்ளிகளை திறப்பது குறித்து  கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் குழந்தைகள் மீது நாங்களும் அக்கறை காட்டுகிறோம் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்றார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.