பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் – முதல்வர்

நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ணனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றம்.

நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். தூத்துக்குடி துறைமுக சாலை விரிவாக்கம், சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கீழ்பவானி பாசன பகுதி சீரமைத்தல் – புனரமைத்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

மேலும், 8 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்