நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற அமர்வில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என மத்திய அரசு உறுதியளிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,  வேளாண் சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.அடுத்த நாடாளுமன்ற அமர்வில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என மத்திய அரசு உறுதியளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube