இந்த படத்தில் நான் நடிக்கவில்லை! வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் - நடிகை பூஜா குமார்

இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம்.  நடிகை பூஜா

By leena | Published: May 26, 2020 09:40 AM

இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். 

நடிகை பூஜா குமார் பிரபலமான இந்தோ - அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், நடிகர் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவன் இருக்கிறான். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில், நடிகை பூஜா குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகை பூஜா கூறுகையில், 'இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.' என்றும் கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc