சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் – வாணி போஜன்.!

தான் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார். 

தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது ” திரைப்படங்களில் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம், இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க டிவி சீரியல்களுக்கு பொருந்தாது ஒரு கதாபாத்திரத்தில் தொடங்கி 5 வருடங்கள் நடிக்க வேண்டியிருக்கும். ஹீரோவை சுற்றி அதிக நேரம் செலவிடும் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில்  நடிக்க நான் விரும்பவில்லை ஒரு நடிகையாக எனக்கு சவாலான சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.