நானும் ஆதரிக்கிறேன்! நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ட்வீட்!

நானும் ஆதரிக்கிறேன்! நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ட்வீட்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்வி கொள்கை குறித்த  தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,”புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லாரும் ஆதரிக்கக் கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளின் தரம் இன்னும் அதிகமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube