நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘ காலங்காலமாக உள்ள நடிகர் சங்க பிரச்னை விரைவில் முடிவடைந்தால் நல்லது. நடிகர் சங்கத்தின் ஒரு அணிக்கு நான் ஆதரவு, அது எந்த அணி என்று கூற முடியாது.’ என தெரிவித்துள்ளார்.