உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன காவலர் ரேவதியை தலை வணங்குகிறேன் - ஜி. வி. பிரகாஷ்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின்

By ragi | Published: Jul 01, 2020 02:41 PM

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதியை ஜி. வி. பிரகாஷ் பாராட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காவலர் ரேவதி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் லத்தியால் அடித்தார்கள் என்றும், நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என்றும் தைரியமாக கூறியுள்ளார். இதனையடுத்து இவரது உண்மைத் தன்மையை பாராட்டி பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜி. வி. பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, நீ வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த ட்வீட்க்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc