அன்றே அறிக்கை விடுத்தேன்., இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி – நிறுவனர் ராமதாஸ்

அன்றே அறிக்கை விடுத்தேன்., இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி – நிறுவனர் ராமதாஸ்

முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பலரும் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றார்கள்.

அந்தவகையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உழவர் திருநாளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube