அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் – கமல்..!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் என கமல் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் இன்று 3-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் நேரிலும், சமூகவலைத்தளங்கள் மூலம் தங்களது அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன். பொதுநலம் விரும்பி தம்முயிர் ஈந்தவர்களுக்கு வீரவணக்கம் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan