விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆர்வம் உள்ளது – பூஜா ஹெக்டே.!

விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நான் காத்துள்ளேன் என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். 

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் முதலில் தமிழ் படத்தில் நடித்துதான் அறிமுகமானேன். மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நான் காத்துள்ளேன். அவருடன் ஜோடி சேர மிகவும் ஆர்வம் உள்ளது. அவருக்கு ஜோடியாக நான்தான் என்று இருந்தால் நிச்சியமாக நடக்கும் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.