அத செலவு பண்ணிட்டேன் திருப்பி தர முடியாது…! அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்…!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் ரஞ்சித் தாஸ் என்பவர், தனது வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.5.5 லட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் ரஞ்சித் தாஸ் என்பவர், பாட்னா கிராம வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அந்த வங்கியின் சார்பாக மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட ரூ.5.5 லட்சம் தவறுதலாக ரஞ்சித் தாஸின் வங்கி கணக்குக்கு சென்றுவிட்டது.

இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த கிராமவாசி தனக்கு மோடி தான் இந்த 5 லட்சத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டுள்ளதாக எண்ணி அதை எடுத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் ரஞ்சித்துக்கு ரூ.5.5 லட்சத்தை திருப்பி அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணத்தை செலவழித்து விட்டதாகவும், பிரதமர்  பிரதமர் அனைவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று சொல்லி இருந்தபடி, தனக்கு முதல் தவணையாக ரூ.5.5 லட்சம் போட்டதாக எண்ணி செலவு செய்து விட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை, அதனால் திருப்பித் தர இயலாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை திருப்பி வழங்க வங்கி கணக்கில் எதுவும் பாக்கி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி, கடந்த  2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பேசும்போது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும்  ரூ.15 லட்சம் போடுவதாக கூறியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.