அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு 219,695 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே வீடு திரும்பினார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் மிகவும் நலமாக உள்ளேன் என்றும், அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள், ஓட்டுப் போடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகள் ட்ரம்ப் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.