மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்… இயக்குனர் மிஷ்கின்..!

master pisasu 2

 மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குனர் மிஷ்கின் அந்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் திரையங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தமிழக அரசு அனுமதித்த நிலையில், வருகின்ற 13ம் திரையங்குகளில் வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே படத்தை பார்க்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருக்கும் நிலையில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கியுள்ள பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “

அதில், “கதை இல்லாமல், படம் இல்லாமல் எங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது. குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லுங்கள். மாஸ்டர் படத்தின் 13 வது வெளியீட்டைக் காணவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தியேட்டருக்குச் செல்வதன் மூலம் சினிமா தொழில் மீண்டும் வளரும். என்று பதிவிட்டுள்ளார்.