அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன்! விடைபெறுகிறேன்…குட் பை…!

அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன்! விடைபெறுகிறேன்…குட் பை…!

புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு  செல்கிறேன்.

கடந்த வருடம் நவ.3ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்த நிலையில், டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார்.

அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் புதியதாக பொறுப்பேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்து  கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் எப்போதும் உங்களுக்காக பாடுபடுவேன். நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு  செல்கிறேன். சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல சிக்கல்கள் இருந்தபோதும், அமெரிக்காவை நல்ல நிலையில் வைத்திருந்தேன். எனது தலைமையிலான அரசாங்கம் பல சாதனைகளை செய்துள்ளது. விடைபெறுகிறேன். குட் பை.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube