‘பரப்புரைக்கு வர முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்’ – ஈவிகேஎஸ் இளங்கோவன்

முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் பரப்புரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் பரப்புரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். யார் வேட்பாளராக வரவேண்டும் என திமுக சொன்னதாக எனக்கு தெரியவில்லை. வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேடம் திமுகவுடன் கலந்து பேசி இருப்பார்கள் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment