நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை வானகரத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட முதுகலை மருத்துவ படிப்பிற்கான சிவிலேஷன் மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்திய பிறகே, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube