மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது- அண்ணாமலை..!

ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, முதல்வர் நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்; நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான்.

இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்..?தன்னை பெரிய பொருளாதார அறிஞர் கூறிக்கொள்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர். மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும். தேவையில்லாத விசபரிட்சையை செய்ய வேண்டாம்.

திமுக தேனிலவு காலகட்டத்தில் உள்ளது. கடந்த 4 மாதத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம், இதை மக்களிடம் எடுத்து செல்வோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது. இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை என தெரிவித்தார்.

author avatar
murugan