அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே…! வெறும் கொட்டாங்குச்சி தானேனு தூக்கி எறியாதீங்க…!

கொட்டாங்குச்சியில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய, என்ன பயன் உள்ளது எனது பற்றி பார்ப்போம்.

நாம் நமது வீடுகளில் சமையலுக்காக தேங்காய் பயன்படுத்துவதுண்டு. அந்த தேங்காயை பயன்படுத்தி  விட்டு,கொட்டாங்குச்சியை தேவையில்லை என்று நினைத்து நாம் தூக்கி எறிவதுண்டு. ஆனால் இதன் பயனை அறிந்தவர்கள் தூக்கி எறிய மாட்டார்கள். ஏனென்றால் இந்த கொட்டாங்குச்சியில் பலவகையான நன்மைகள் நமக்கு உண்டு.

அந்த வகையில் நமது சருமத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒரு பயனும் இதில் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

கொட்டாங்குச்சியை எடுத்து, நன்கு தீயிட்டு கொளுத்த வேண்டும். பின் அதனுள் அந்த கொட்டாங்குச்சி சாம்பலாகும் வரை விட்டுவிடாமல், கொட்டாங்குச்சி நன்கு கருப்பாக மாறும் வரை வைத்து, பின் அதனை எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்க வேண்டும். அடித்து நன்றாக தூள் போல வந்தவுடன், அதனுள் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை நமது முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். இன்று நாம் கடைகளில் பல்லாயிரக் கணக்கில் செலவு செய்து வாங்கக்கூடிய சார்கோல் மாஸ்க் என்பது இப்படித்தான் செய்யப்படுகிறது. இதனை நாம் முகத்தில் மாஸ்க் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.

பல் மஞ்சளாக உள்ளவர்கள், வாரம் இருமுறை இந்த கொட்டாங்குச்சி கரித்தூளை வைத்து பல் துலக்கினால், பற்கள் பளபளப்பாக மாறிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.