வாக்கு எந்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை….! – அகிலேஷ் யாதவ்

உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்த பின், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் வருகிற ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது தற்போது எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவரிடம் நிருபர்கள், மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் கூட வாக்குசீட்டு தான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட்டு பல நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆனால் ஈவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது என்றும், நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்கு தயாராகும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்த பின், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும் என்றும் பாஜகவின் நாங்கள் தோற்கடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.