என் ஞான தந்தையை இழந்து விட்டேன் – நடிகர் சிவகுமார் உருக்கம்..!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

இவர் புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில், நடிகர் சிவக்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” நான் பிறந்த10 மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன், தற்போது 80 வயதில் எனது ஞான தந்தை 99 வயது கி.ரா.அவர்களை இழந்து விட்டேன். எனக்கும் எழுத்தாளர் கி.ரா.வுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகள் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே இருப்பார் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.