இதற்காக நான் ஊர் ஊராக சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் – கமலஹாசன்

நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட போது, நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கு தான்  மற்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

ஆனால் அவர்கள் செய்வது தவறு என்பதை கிட்டத்தட்ட 20,25 வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். அதற்காக தான் தற்போது நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும், இந்த டார்ச் லைட்டை கொண்டு மக்களிடம் கொண்டு சேர்க்க ஐந்து வருடம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் 18 நாட்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.