எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை! தற்கொலை செய்து கொண்ட மருத்துவரின் கடிதம்!

எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை.

இன்று பலருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த மன அழுத்தம் அவர்களை தற்கொலைக்கு நேராக கூட இழுத்து சென்று விடுகிறது. இந்நிலையில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், மோஹித் சிங்கலா (40).

இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவரின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர்.

இந்நிலையில், மோஹிதின் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘இது என்னுடைய வாழ்க்கை. அதனால் நான் தான் என்னுடைய வாழ்க்கையை முடிவு செய்வேன். எனக்கு 60-70 வயது வரை வாழ விரும்பவில்லை. இதற்கு மேல் நான் என் மனநிலையை மறைக்க விரும்பவில்லை.’ என  கடிதத்தில் எழுதியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.