சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை –  திருமாவளவன்

துணைவேந்தர்  சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில்  விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சுரப்பா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில்,அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர். சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கொள்கை மீது நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.ஆனால் சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறினார்.இந்நிலையில் கமல் சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,துணைவேந்தர்  சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.