ஆளுனர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!

ஆளுநருக்கு எந்தளவுக்கு வரலாறு தெரியும் என தெரியவில்லை. மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டிரா என்றால் நாடு என்று தான் அர்த்தம். – அமைச்சர் பொன்முடி. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய தமிழ்நாடு – தமிழகம் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு குரல்கள் இன்னும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆளுநர் கூறிய கருத்து குறித்து உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ இந்தியா சுதந்திரம் பெற்ற போது அனைத்து மாநிலங்களும் எப்படி செயல்படும் என்ற விவாதம் வந்த போது டாக்டர் அம்பேத்கர் தான் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என கொண்டு வந்தார். ஸ்டேட் என்றால் நாடு, யூனியன் என்றால் ஒன்றியம் என அர்த்தம் .

ஆளுநருக்கு எந்தளவுக்கு வரலாறு தெரியும் என தெரியவில்லை. அவர் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளில் பேசி வருகிறார். மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டிரா என்றால் நாடு என்று தான் அர்த்தம். எதோ ஒரு எண்ணத்திற்காக ஆளுநர் இவ்வாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார். அதனை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆளுநரிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஆளும் அரசு என்ன செய்கிறதோ அதனை நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் நிறைவேற்றி தரவேண்டும் என அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment