முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன் என டி.கே. சிவகுமார் பேட்டி.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் இன்று டெல்லி சென்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.கே. சிவகுமார், நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்.
சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறி டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளதால், முதலமைச்சராக அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.