பிரபல தொலைக்காட்சி தொழுகுப்பாளினியும்,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அப்சரா ரெட்டி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இது குறித்து அப்சரா ரெட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.