,

விஜய் சார்….அந்த வார்த்தையை சொன்னதும் அழுதுட்டேன் – லலித் குமார் உருக்கம்…!

By

vijay - lalith kumar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார்.

LeoFirstSingle
LeoFirstSingle [Image Source :file image]

சமீபத்திய ஒரு தனியார் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படத்தின் அனுபவம் குறித்தும் விஜய் பற்றியும் விவரித்தார். அதில் பேசுகையில், பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாளை விஜய் சார் எனக்கு கால் பண்ணி ஆபிஸ் வர சொன்னாரு… நானும் அடுத்த நாள் காலை அவரது ஆபீஸ்க்கு போனேன்.

vijay lalith kumar
vijay lalith kumar [Image Source : cineexpress]

என்னப்பா என்ன பண்ற அப்படின்னு கேட்டாரு, நீங்க தான் சொல்லணும் சார் அப்படின்னு சொன்னேன். படம் பண்ணுவோமா என்று கேட்டதும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. காரணம் நடிகர் விஜய் தற்போது இருக்கும் நிலைமைக்கு அவர் படத்தை தயாரிக்க, பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். அவர் படத்தை எப்போடா தயாரிக்கலாம் என்று. ஆனால் அப்படி இருக்கும்போது, என்னை அவர் கூப்பிட்டு அடுத்த படத்தை தயாரிக்க சொன்னபோது, தன்னை அறியாமலே கண்ணில் இருந்து தண்ணி வந்து விட்டது.

LeoFilm
LeoFilm [Image Source : Twitter/@PeaceBrwVJ]

அடுத்த படம் பண்ணலாம்… மாஸ்டர் டீம் அப்படியே போயிருவோமா…லோகேஷ் கூப்பிடுவோம் அப்படின்னு என்னிடம் சொன்னார். அதன்படி அடுத்ததாக இரண்டாவது முறையாக நானும் லோகேஷும் விஜய் அண்ணா சார் பார்க்க ஆபீஸ்க்கு சென்றோம். அப்போது யாரெல்லாம் கூப்பிடனும் எந்த டெக்னிக்க்ஷம் வேணும் என எல்லாம் பிளானும் போட்டு தான் இந்த லியோவை இந்த அளவுக்கு வந்தது என்று கூறினார்.