CAA-வை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக்கொண்டேன்.! மோடியின் சகோதரர் பேச்சு.!

  • மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
  • ராமேஸ்வரத்தில், ராமநாத சாமியையும், அம்பாள் பரிவர்த்தனையும் தரிசனம் செய்த பின்னர், குடியுரிமைச் சட்டம் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சட்டம் அதை புரிந்துகொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாக விமர்சித்தார்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது. எனினும், போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பல இடங்களில் நடைபெறுவாரே இருந்தது. இந்த நிலையில், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனை அடுத்து, ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி நேற்று ராமேசுவரம் வந்தார். ராமநாத சாமியை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேற்று தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, அனைத்து மக்களும் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக கூறினார். மேலும், குடியுரிமை சட்ட திருத்தத்தை யாரும் எதிர்க்க வேண்டாம். அது நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய சட்டம் அதை புரிந்துகொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாக விமர்சித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்