டிக்-டாக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சியடையக் கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன்  என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்   தெரிவித்துள்ளார்.

Image result for tik tok TAMILISAI

தமிழக பட்ஜெட்டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் M.L.A .தமிமுன்  அன்சாரி தமிழக சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் -டாக் செயலியை தடை செய்யவேண்டுமென்று தெரிவித்தார்.

அப்போது அதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் டிக்- டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிவை சந்திப்பதால் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்வதை போல டிக் டாக் செயலியை_யும் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.

Image result for tik tok TAMILISAI

இந்நிலையில் டிக் -டாக் செயலி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,டிக்-டாக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சியடையக் கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன்.அதில் கிண்டல் செய்யக்கூடிய ஆளாக நான்தான் இருக்கிறேன். சில பேர் வரம்பு மீறி கேலி செய்கின்றனர் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here