29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் – ப.சிதம்பரம்

கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிவு.

இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றி. சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது.

இதனை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் உயர்ந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்பட வேண்டும்.

பெரும்பான்மை மேலாதிக்கம், மதக்காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன்செயல் என்று சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய நாட்டைத் தற்காத்து வெற்றி பெற்றிருக்கிறோம் என்று பள்ளுப் பாட வேண்டும். இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.